search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துபாய் லாட்டரி"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த வாரம் துபாயில் விற்பனை செய்யப்படும் ஜாக்பாட் 2 லாட்டரி சீட்டுகளை அஜய் வாங்கினார்.
    • அஜய் வாங்கிய லாட்டரி சீட்டு குலுக்கல் நடந்தது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், ஜிகித்யாலா மண்டலம், துங்கடி பகுதியை சேர்ந்தவர் ஓகுலா அஜய். இவர் கடந்த 4 ஆண்டுகளாக துபாயில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார்.

    கடந்த வாரம் துபாயில் விற்பனை செய்யப்படும் ஜாக்பாட் 2 லாட்டரி சீட்டுகளை வாங்கினார். அஜய் வாங்கிய லாட்டரி சீட்டு குலுக்கல் நேற்று முன்தினம் நடந்தது.

    இதில் அவர் வாங்கிய ஒரு லாட்டரி சீட்டுக்கு ரூ.30 கோடி முதல் பரிசாக விழுந்தது.

    லாட்டரியில் ரூ 30 கோடி பரிசு விழுந்த தகவல் அறிந்து அஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். குடும்ப வறுமை காரணமாக துபாயில் வேலைக்குச் சென்ற அஜய்க்கு லாட்டரியில் ரூ.30 கோடி கிடைத்ததால் அவரது குடும்பம் வறுமையில் இருந்து மீண்டுவிடும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    ஐக்கிய அமீரகத்தின் துபாய் லாட்டரியில் இந்தியர்களில் ஒருவர் ரூ.6.8 கோடியும், மற்றொருவர் பி.எம்.டபிள்யூ காரும் வென்றுள்ளனர். #DubaiLottery
    துபாய்:

    ஐக்கிய அமீரகத்தில் பிரபலமான துபாய் லாட்டரியில் அவ்வப்போது இந்தியர்களுக்கு பரிசுமழை விழுவது வழக்கமான ஒன்றாகி விட்டது. பரிசாக கிடைக்கும் பொருளோ, பணமோ அதற்கு வரி இல்லை என்பதால், அமீரகத்தில் இந்த லாட்டரிக்கு கிராக்கி அதிகம்.

    இந்நிலையில், குவைத்தை சேர்ந்த இந்தியரான சந்தீப் மேனன் என்பவருக்கு ரூ.6.8 கோடி லாட்டரியில் ஜாக்பாட் கிடைத்துள்ளது. “வாழ்க்கையில் என்னைக்குமே எதையும் ஜெயிச்சது கிடையாது. ஆனால், இப்போது லாட்டரியில் பணம் ஜெயித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது” என கூறியுள்ளார் சந்தீப் மேனன்.

    மற்றொரு இந்தியரான சாந்தி போஸ் என்ற பெண், பி.எம்.டபிள்யூ கார் பரிசாக வென்றுள்ளார். 1999-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த லாட்டரியில் இதுவரை 132 இந்தியர்கள் பரிசு வென்றுள்ளதாக கலீஜ் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.

    கடந்த மாத தொடக்கத்தில், கேரளாவை சேர்ந்த இந்தியர் தாய்நாட்டுக்கு கிளம்பும் நேரத்தில் சுமார் 6 கோடி ரூபாய் பரிசாக கிடைத்தது குறிப்பிடத்தக்கது. 
    ×